ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மருத்துவர் மரணம்...மருத்துவரின் கடைசி ட்விட்டர் பதிவு...!

ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மருத்துவர் மரணம்...மருத்துவரின் கடைசி ட்விட்டர் பதிவு...!

ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஜெய்பூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் தீபா சர்மா நிலச்சரிவில் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ளது. அந்த வகையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா,  இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் மழை பெய்து வருவதால் சந்திக்கும் மக்கள் அழிவை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தில், ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஜெய்பூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் தீபா சர்மாவும் உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழப்பதற்கு முன்பதாக ஹிமாச்சல பிரதேசத்தில் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவருடைய ட்விட்டர் பக்கத்தில் Life is nothing without mother nature என்று பதிவிட்டுள்ளார்.நெட்டிசன்கள் அந்த பதிவுகளை ரீட்விட் செய்து  மருத்துவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்ற்னர்.

Find Us Hereஇங்கே தேடவும்