தாறுமாறாக கார் ஓட்டிய யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்!

தாறுமாறாக கார் ஓட்டிய யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்!

மாமல்லபுரம் அருகே காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் பார்ட்டிக்கு  சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடுப்பு எலும்பு, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர் நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் செய்யப்பட்டுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்