ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி சரத்குமார் : இணையத்தை கலக்கும் போட்டோக்கள்

ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி சரத்குமார் : இணையத்தை கலக்கும் போட்டோக்கள்

வரலட்சுமி சரத்குமார் மற்றும் சரத்குமார் ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதற்காக புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி மற்றும் சரத்குமார் இருவரும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனை நேரில் சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்