ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்த மர்ம நபர்கள்.!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்த மர்ம நபர்கள்.!

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கம் செய்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் நடிகரும், இசையமைப்பாளருமாக வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது, சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ளன. இவை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஹிப் ஹாப் ஆதி தனது தனிப்பட்ட யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். தனது தனிப்பட்ட பாடல்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவேற்றியிருந்தார். அந்த சேனலை 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் இருந்த வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளனர். ஏற்கனவே சமீபத்தில் நடிகை குஷ்புவின் ட்வீட்டர் பக்கமும் மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்