பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்.!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்.!

தமிழ்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி இன்று காலமானார்.

தமிழில் எதிர்நீச்சல், பாமா விஜயம், வெள்ளி விழா உட்பட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜெயந்தி இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தனது சிறப்பான நடிப்பிற்காக ஏழு முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்

கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த் இவர் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். 

இவரது மறைவுக்கு திரையுலகினரும் அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்