நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!!

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் முழு உருவ சிலை, ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய் சிலையுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது இந்த விஜய் சிலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்