நடிகையை மணக்கும் கவிஞர் சினேகன்: ஜூலை 29ம் தேதி திருமணம்.!

நடிகையை மணக்கும் கவிஞர் சினேகன்: ஜூலை 29ம் தேதி திருமணம்.!

பாடலாசிரியர் சினேகனுக்கும் நடிகை கன்னிகாவுக்கும் வரும் ஜூலை 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக திகழ்பவர் சினேகன். இதுவரை இவர் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு சுமார் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவரது பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடலாசிரியராக மட்டுமின்றி இவர் நடிகர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யவுள்ளார். கன்னிகா தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

இவர்கள் திருமணம் வரும் ஜூலை 29ம் தேதி நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் எளிமையாக நடைபெறவுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்