ஆக்‌ஷன் த்ரில்லரில் எனிமி படத்தின் டீசர் வெளியீடு

ஆக்‌ஷன் த்ரில்லரில் எனிமி படத்தின் டீசர் வெளியீடு: குஷியில் ரசிகர்கள்..!

ஆர்யா-விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் எனிமி டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

'அவன் இவன்' படத்துக்கு பிறகு, நடிகர் விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் நடிக்கும் திரைப்படம் 'எனிமி'. இப்படத்தை விக்ரமின் ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளனர். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாசும் நடிக்கின்றனர்.

தமன் இசையில் உருவாகும் இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் துபாய் மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

விஷால் மற்றும் ஆர்யாவின் தனித்தனி போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் த்ரில்லரில் உருவாகி இருக்கும் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்