என் கணவர் ஒரு அப்பாவி: நடிகை ஷில்பா ஷெட்டி

என் கணவர் ஒரு அப்பாவி: நடிகை ஷில்பா ஷெட்டி..!

ஆபாச படங்களை தயாரித்ததில் தனது கணவருக்கு எந்த சம்பந்தமில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களை தயாரித்து அதை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்து பணம் சம்பாதித்ததாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜ்குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 27ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜ்குந்த்ராவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பாவுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள குற்றப்பிரிவு போலீசார் ஜூகுவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதை அடுத்து, வீட்டை சோதனை செய்து ஒரு லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக போலீசார் தரப்பில், "ராஜ்குந்த்ராவின் நிறுவனங்களில் ஷில்பா ஷெட்டி இயக்குனராக இருக்கிறார். இதனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது, தனது கணவர் அப்பாவி என்றும், அவருக்கும் ஆபாச படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் ஷில்பா ஷெட்டி தெரிவித்தார்" என கூறப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்