சூர்யா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ரெய்னா

சூர்யா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா..!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வருங்கால தலைமுறைக்கு தொடர்ந்து இன்ஷ்பிரேஷனாக இருங்கள். எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்" என தெரிவித்துள்ளார்

சூர்யா தன்னுடைய ரசிகர் என்பதை பல மேடைகளில் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. தற்போது சூர்யாவுக்கு சுரேஷ் ரெய்னா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Find Us Hereஇங்கே தேடவும்