எங்கள் ராஜா பிறந்துவிட்டான் – மகன் பிறந்த மகிழ்ச்சியில் சாண்டி மாஸ்டர்..!

எங்கள் ராஜா பிறந்துவிட்டான் – மகன் பிறந்த மகிழ்ச்சியில் சாண்டி மாஸ்டர்..!

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் தனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசனில் பங்கேற்றவர் சாண்டி மாஸ்டர். இந்த நிகிழ்ச்சி மூலம் இவருடன் இவரது மகள் லாலாவும் பிரபலமானார்.

சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியா கர்ப்பமாக இருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார் சாண்டி. அதில் ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் “எங்கள் ராஜா பிறந்துவிட்டான்” என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார் சாண்டி மாஸ்டர்.

இந்நிலையில் இருவருக்கும் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிக் பாஸ் பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்