கல்யாண வீடு நடிகைக்கு நிச்சயதார்த்தம் : இணையத்தை கலக்கும் போட்டோக்கள்

கல்யாண வீடு நடிகைக்கு நிச்சயதார்த்தம் : இணையத்தை கலக்கும் போட்டோக்கள்

சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘கல்யாண வீடு’ சீரியலில் நடித்த நடிகை அஞ்சனாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சன் டிவில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற சீரியல் சுமார் 650 எபிசோடுகளைக் கடந்து கடந்த ஆண்டு நிறைவு பெற்றது.இந்த தொடரில் ஸ்வேதா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை அஞ்சனா நடித்திருந்தார். இந்த கதைப்படி இவர் கதிரேசன் கதாப்பாத்திரத்தில் நடித்த இயக்குநர் திருமுருகனுக்கு முன்னாள் காதலி. இவர் இந்த தொடர் விறுவிறுப்பாக செல்ல ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில், நடித்த அஞ்சனாவுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அஞ்சனா பகிர்ந்துள்ளார். அவரின் நிச்சயதார்த்த நிகழ்வில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவருக்கு சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்