சார்பட்டா கதாபாத்திரத்துக்கு வரவேற்பு: அஜித்துக்கு சமர்ப்பித்த நடிகர்

சார்பட்டா பரம்பரை படத்தில் கதாபாத்திரத்துக்கு வரவேற்பு: அஜித்துக்கு சமர்ப்பித்த நடிகர்..!

என்னை உற்சாகப்படுத்தியதற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி அஜித் சார் என "சார்பட்டா பரம்பரை" படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தெரிவித்துள்ளார். 

"சார்பட்டா பரம்பரை" அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். 

இந்த நிலையில், தற்போது "சார்பட்டா பரம்பரை" படத்தின் வேம்புலி கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை அஜித்துக்குச் சமர்ப்பித்துள்ளார் ஜான் கொக்கென்.

"சார்பட்டா பரம்பரை" படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தனது பேஸ்புக் பக்கத்தில், "#thalaajith #Veeram படப்பிடிப்பின்போது உங்களுடன் நான் செலவழித்த நேரம் என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது. ஒவ்வொரு நாளும் கடின உழைப்பை செலுத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.

என்னை உற்சாகப்படுத்தியதற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி. என்னை சிறந்த மனிதராக இருக்கவும் ஊக்குவித்தீர்கள். தற்போது வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்