ஓடிடியில் வெளியாகும் நயந்தாராவின் நெற்றிக்கண்!

ஓடிடியில் வெளியாகும் நயந்தாராவின் நெற்றிக்கண்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என்று எதிர்பார்கக்ப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணாமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது. 

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி மூலமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி விரைவில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்