தல 61 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடக்கம்.?

தல 61 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடக்கம்.?

நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி, போனி கபூர் தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் அப்படத்தை தொடர்ந்து ஹெச். வினோத்-அஜித்-போனி கபூரின் கூட்டணி வலிமை படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. விரைவில் ஒரே ஒரு சண்டைக் காட்சியை படமாக்க வெளிநாடு செல்ல படக்குழு திட்டமிட்டு வருகிறது. அத்துடன் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் ஹெச்.வினோத் இயக்கி, போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் நடிக்கும் 61வது படம் என்பதால் தற்போதைக்கு தல 61 என்று குறிப்பிடப்படுகிறது.

இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இதன் பணிகள் முழுவீச்சில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும் தல 61 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸின் 3ம் அலையை பொறுத்தே இந்த படப்பிடிப்பு திட்டமும் அமையும் என்றும் தெரிகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்