மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி?

மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஷாலினி?

நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மலையாள நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானதால் பேபி ஷாலினி என அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர் கதாநாயகியாக அறிமுகமானார். 

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் ஷாலினிக்கு தமிழில் அதிக ரசிகர்கள் குவிந்தனர்.  

இதையடுத்து, அஜித்துடன் 'அமர்க்களம்' படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பின்னர் கண்ணுக்குள்-நிலவு படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் உடன் ஷாலினி நடித்த 'அலைபாயுதே' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பின்னர் 2001ஆம் ஆண்டு வெளியான 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் நடித்தார். அதன்பிறகு ஷாலினி தற்போது வரை சினிமா பக்கம் வரவில்லை. 

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்தப் படத்தில் ஷாலினியும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்