ஆபாச பட தயாரிப்பு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது.!

ஆபாச பட தயாரிப்பு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது.!

ஆபாச பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து அதனை விநியோகம் செய்ததாக ஒரு வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா நேற்று கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு பின்னர் ராஜ் குந்த்ரா நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் உள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.

ஆனால் இதனை மறுத்துள்ள ராஜ் குந்த்ரா, ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்