ஃபர்ஹான் அக்தரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

18 மாதங்கள் அயராத உழைப்பு: ஃபர்ஹான் அக்தரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

டூஃபான் படத்துக்காக ஃபர்ஹான் அக்தர் உடல் எடையைக் கூட்டியும், குறைத்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஃபர்ஹான் அக்தர் நடித்துள்ள படம் 'டூஃபான்'. இப்படத்தில் ஃபர்ஹான் அக்தர் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் மிருனல் தாகூர், ப்ரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இப்படம் பல விமர்சனங்களை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் ஃபர்ஹான் அக்தரின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த திரைப்படத்துக்காக ஃபர்ஹான் அக்தர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். படத்திலும் பல காட்சிகளில் உடல் எடையைக் கூட்டியும், குறைத்தும் நடித்து இருக்கிறார். 

இந்த நிலையில், டூஃபான் படத்துக்காக உடல் எடையைக் கூட்டி, குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபர்ஹான் அக்தர் நேற்று (ஜூலை 20) பகிர்ந்துள்ளார்.

அந்த பதில், "என்னவொரு பயணம். 18 மாதங்கள் அயராத உழைப்பு. ஆனால், ஒவ்வொரு சொட்டு வியர்வையும், தசைகளின் வலியும், கூட்டி, குறைக்கப்பட்ட ஒவ்வொரு எடையும் பலனைக் கொடுத்திருக்கிறது'" என ஃபர்ஹான் அக்தர் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஃபர்ஹானை பாராட்டி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்