இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் சன்னி லியோன். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர். இந்நிலையில் இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் படத்து வருகிறார்.,
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து ட்விட்டரில் மறைமுகமாக பதிவை நடிகை சன்னி லியோன் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் இது ரூபாய் 100யை தாண்டி விட்டதால் உங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்வது அவசியம்… சைக்கிள் ஓட்டுவது நலம்… என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.