குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற அஸ்வின், சிவாங்கி புகழும் ஆகியோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்நிலையில் அஸ்வின் மற்றும் புகழும் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு என்ன சொல்லப் போகிறார் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி நடிகை சகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.