மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.

கட்ந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் ரஜினி அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தார். அந்த நேரத்தில் அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்துள்ளார். அவர்களுடன் ரஜினி எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அழைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடி முடிந்தது என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரத்தில் டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com