பிகில் படத்தை காண்பிடித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்.!

பிகில் படத்தை காண்பிடித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்.!
பிகில் படத்தை காண்பிடித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்.!

சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சசிவர்ஷன் (10), தனது உறவினர் அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அப்போது சசிவர்ஷன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் வலித் தெரியாமல் இருக்க ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றனர். ஆனால் சிறுவன் பயத்தில் அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. 

அப்போது மருத்துவமனை பணியாளர் ஜின்னா என்பவர் அந்த சிறுவனிடம் பேசி அவருக்கு விஜய் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜின்னா, தனது செல்போனில் இருந்தந் விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனை அமைதிப்படுத்தியுள்ளார்.

அந்த சிறுவன் தலையில் ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தியுடன், தையல் போட்டு சிகிச்சையும் அளித்தனர்.

விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜய்யின் பிகில் படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com