தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றுமொரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
தற்போது படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி உள்ள நடிகர் தனுஷை, அவர் அண்மையில் சந்தித்து, படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.