ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது அவர் பார்ட்டி, பொன் மாணிக்கவேல், ஜெகஜால கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
’என்னை அடுத்த நயன்தாரா என்றும், தமன்னா என்றும் கூறுவது முட்டாள்தனமானது. நான் நானாக நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படுவது எல்லாம் மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், ‘நான் பேசுவதை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்களோ என்று யோசித்து அமைதியாகவே இருப்பேன். நான் கல்லூரி படிக்கும் போது எனது பெற்றோர்கள் மதுரைக்கு அருகில் உள்ள மடப்புரம் காளி கோவில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது எனக்கு சாமி வந்துவிட்டது. அந்த நாள் முதல் எனக்கு பக்தி அதிகமாகி விட்டது. இப்போதும் எனக்கு சில சமயங்களில் சாமி வரும்’ என கூறியுள்ளார்.