உலகத்தை புரிந்து கொள்ள இந்திய பயணம் உதவியது: வில் ஸ்மித் நெகிழ்ச்சி!

உலகத்தை புரிந்து கொள்ள இந்திய பயணம் உதவியது: வில் ஸ்மித் நெகிழ்ச்சி!
உலகத்தை புரிந்து கொள்ள இந்திய பயணம் உதவியது: வில் ஸ்மித் நெகிழ்ச்சி!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆவணப் படம் ஒன்றில் நடிப்பதற்காக கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆவணப் படம் ஒன்றில் நடிப்பதற்காக கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தார். அப்போது அவர் ஹரித்வாரில் நடைபெற்ற பூஜை ஒன்றில் கலந்து கொண்டார். மேலும் தாஜ்மஹால் உள்ளிட்ட சில இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்தியாவில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்திய பயணத்தில் தன்னுடைய அனுபவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த பதிவில், ‘அனுபவத்தின் மூலம் கடவுள் நமக்கு பாடம் கற்றுக் கொடுப்பதாக எனது பாட்டி எப்போதும் கூறுவார். இந்திய பயணம், மக்கள், இயற்கையான அழகு போன்றவை எனது கலை மற்றும் உலகம் பற்றிய உண்மையான புரிதலை உணர வைத்தது. மேலும் இவை அனைத்தும் என்னை நானே புரிந்து கொள்ள உதவியது’ என நெகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com