ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா. இவர் முதல்முறையாக நடிகராக ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா. இவர் முதல்முறையாக நடிகராக ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் ஆர் என்ற சிபிஐ அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தினை அகஸ்திய மஞ்சு என்பவர் இயக்குகிறார்.இவர் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தை ராம்கோபால் வர்மாவுடன் இணைந்து இயக்கியுள்ளார்.
இவர் நடிகராக அறிமுகமாவதற்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.