தமிழ், தெலுகு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழிலும், தெலுங்கிலும் இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ், தெலுகு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழிலும், தெலுங்கிலும் இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழில் சமந்தா, விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இப்படத்தில் சமந்தா நடித்திருந்த வேம்பு கதா பாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகு தனது கணவர் நாகசைதன்யாவுடன் நடித்துள்ள படம் மஜிலி, இப்படம் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நாகசைத்தன்யாவின் இந்த வெற்றியை பாராட்டும் வகையில் நாகார்ஜூனா அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோவுடன் தன்னுடைய பிளாக் ப்ளஸ்டர் ஜோடி என்று பதிவிட்டு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.