தமிழகத்தில் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறாததால், தமிழ் திரையுலக தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் கோலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் எடுக்கப்படுவது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் சென்னையில் பல ஸ்டுடியோக்கள் ஷாப்பிங் மால்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறி விட்டன.
தமிழகத்தில் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறாததால், தமிழ் திரையுலக தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். அந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, நடிகர் விஜய் தனது 63 படத்தின் படிப்பிடிப்பை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்க வேண்டும் என அட்லீயிடம் கண்டிப்புடன் தெரிவித்து விட்டாராம்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றிலும் பிரம்மாண்டமாக விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த முடிவு தமிழ் திரையுலக தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.