சண்டக்கோழி-2 படத்திற்கு பிறகு நடிகர் விஷால், வெங்கட் மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' படம் உருவாகியுள்ளது.
சண்டக்கோழி-2 படத்திற்கு பிறகு நடிகர் விஷால், வெங்கட் மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.இப்படத்தில் விஷால், ராஷி கண்ண உடன் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோக்யா படம் வரும் மே மாதம் 17ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி என்னவென்று இன்று மாலை தான் படக்குழு அறிவிக்கவுள்ளது.