கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. இவர் கடந்த நவம்பர் மாதம் தனது காதலரான சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். சிவக்குமார் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட இருவரும் கணவன்-மனைவியாக தங்கள் முதல் காதலர் தினத்தினை கொண்டாடினர்.
இந்நிலையில் தற்போது சுஜா வருணி கர்ப்பமாக இருக்கிறாராம். இந்தச் செய்தியை, சிவக்குமார் மற்றும் சுஜா வருணி தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சுஜா வருணி தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம்’ என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.