நடிகர் சஞ்சீவ் குளிர் நூறு டிகிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் சஞ்சீவ் குளிர் நூறு டிகிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தினை தொடர்ந்து சஞ்சீவ்விற்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இவர் தமிழின் முன்னணி தொலைகாட்சியில் ஒரு தொடரில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.
அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்தொடரின் நாயகியாக நடிகை ஆலியா மானாஸாவும், சஞ்சிவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாம். இதனை தனது இன்ஸ்டாகிராமில் சஞ்சீவ் பதிவிட்டுள்ளார்.