நடிகர் தனுஷ் தற்போது எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் தற்போது எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே கொடி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது உருவாகி வரும் படத்தில் தனுஷ் அப்பா மகன் என்று டபுள் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். மற்றொரு கதாநாயகியின் விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியது. அதற்குள், முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசைமைக்கிறார், இயக்குநர் வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.