நடிகர் ஆர்யா, கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்யவுள்ளதாக காதலர் தினத்தன்று அறிவித்தார்.
நடிகர் ஆர்யா, கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்யவுள்ளதாக காதலர் தினத்தன்று அறிவித்தார். அதன்படி நடிகர் ஆர்யா- நடிகை சாயிஷா திருமணம் கடந்த மார்ச் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேலும் மார்ச்14ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
சமீபத்தில் தான் இருவரும் ஹனிமூன் சென்ற போட்டோகள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சாயிஷா போட்டோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏன் என்றால் அந்த போட்டோவில் சாயிஷா கழுத்தில் தாலியுடன் இருக்குறார். ஹனிமூன் சென்ற போட்டோகளில் தாலி இல்லை இப்போ எப்படி தாலி என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
உண்மையில் ஆர்யா- சாயிஷா திருமணம் முஸ்லீம் முறைப்படி தான் நடைபெற்றது. அதனால் தாலியெல்லாம் கட்டவில்லை. எனவே இப்படம் ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.