தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் ரஜினி?

தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் ரஜினி?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் உடல் நலம் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் ரஜினி. 

இந்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் தாம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என ரஜினி கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக இரண்டு மத்திய அமைச்சர்களிடம் ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. 

14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட சிறப்பு தனி விமானத்தில், ரஜினியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு சிறிது காலம் அங்கு ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, ரஜினியின் தனி விமானப் பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்