பிரபலமான இந்திய திரைப்படங்கள்: மாஸ்டர் முதலிடம்

2021ஆம் ஆண்டு பிரபலமான இந்திய திரைப்படங்கள்: மாஸ்டர் முதலிடம்..!

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபி-யின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படங்களில் பிரபலமான படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது

இந்த பட்டியலில் திரைப்படங்களுடன் வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி ப்ரோ தளத்தின் தரவுகள், அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றை வைத்து பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் த்ரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

(இதுவரை) 2021 பிரபலமான திரைப்படங்கள்/ வெப் சீரிஸ் முழு பட்டியல் விவரம்:

1. மாஸ்டர்

2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)

3. தி வைட் டைகர்

4. த்ரிஷ்யம் 2

5. நவம்பர் ஸ்டோரி

6. கர்ணன்

7. வக்கீல் ஸாப்

8. மஹாராணி (வெப் சீரிஸ்)

9. க்ராக்

10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

இந்தப் படங்கள்/வெப் சீரிஸ் வெளியான அடுத்த 4 வாரங்களில், அந்தந்த படைப்புகளில் பக்கங்கள் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அத்தனை படைப்புகளும் 7 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்