தங்கையின் கணவரை இழந்த நடிகரின் வீட்டில் மீண்டும் ஓர் மரணம்..!

தங்கையின் கணவரை இழந்த நடிகரின் வீட்டில் மீண்டும் ஓர் மரணம்..!

கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும் கூட தொற்று பாதிப்பினாலோ தொற்று தாக்கிவிட்டு சென்ற பிறகும் வேறு தாக்கங்களாலோ பாதிக்கப்படுபவர்கள் மரணித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை தொற்று பாதிப்பும் தொற்றின் தீவிரமும் குறைவதால் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனிடையே கொரோனா பரவல் தடுப்புக்காக மக்கள் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.  எனினும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாது அவர்களின் நெருங்கிய உறவினர்களும் அடுத்தடுத்து மரணிக்கும் சோகங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிரபல இளம் நகைச்சுவை நடிகரான பால சரவணனின், தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

நடிகர் பாலசரவணன் அண்மையில் தான் தமது சகோதரியின் கணவர், 32 வயதிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும் கொரோனாவை அலட்சியமாக கருத வேண்டாம் என்றும் தமது சமூக வலைதளத்தின் தெரிவித்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியிருந்தார்.

தங்கையின் கணவர் இறந்து ஒரு மாதமே ஆன நிலையில் பாலசரவணனின் தமது தந்தையையும் தற்போது கொரோனாவால் இழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்