கொரோனாவால் வருமான வரி செலுத்த முடியாமல் கஷ்டப்படும் தமிழ் நடிகை!

கொரோனாவால் வருமான வரி செலுத்த முடியாமல் கஷ்டப்படும் தமிழ் நடிகை!
முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தார்.

இவர் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் இருக்கிறார். 

இந்நிலையில், வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக கங்கனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை. 

இதனால் வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வருமான வரியின் பாதி தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்