பிரபல டப்பிங் கலைஞர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரைத்துறையினர்!

பிரபல டப்பிங் கலைஞர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரைத்துறையினர்!

பிரபல பின்னணி பாடகர் கண்டசாலாவின் மகனும் பிரபல டப்பிங் கலைஞருமான கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணமடைந்த செய்தி திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் பாடகராக அறியப்படுபவர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ். தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல மொழி திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளார் இவர். இவரது மூத்த மகன் கண்டசாலா ரத்னகுமார் பல ஆண்டுகளாக சினிமா டப்பிங் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். 40 வருடமாக பல திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களுக்கு டப்பிங் பேசியுள்ள ரத்னகுமார் தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்தவர். சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து குணமாகி வந்த பின்னரும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட வேறு சில உடல்நல பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று ரத்னகுமார் திடீரென உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு; தமிழ்நாட்டுக்கு நன்மையாக இருக்குமா?

  • நட்புறவு ஏற்படலாம்
  • காவிரி பிரச்னை முடிவுக்கு வரும்
  • காவிரி பிரச்னை தீவீரமடையும்
  • மாற்றம் எதுவும் இருக்காது

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்