பிக்பாஸ் சீசன் 5 தொடக்கம்; தீயாய் பரவும் தகவல்!

பிக்பாஸ் சீசன் 5 தொடக்கம்; தீயாய் பரவும் தகவல்!
தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றதுநடைபெற்றது.

இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்