சுஷாந்திற்கு அவரது குடும்பத்தினரே கஞ்சா வாங்கி கொடுத்தனர்; நடிகை ரியா பரபரப்பு வாக்குமூலம்!

சுஷாந்திற்கு அவரது குடும்பத்தினரே கஞ்சா வாங்கி கொடுத்தனர்; நடிகை ரியா பரபரப்பு வாக்குமூலம்!
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங். இவர் கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 

சுஷாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ.யும், அமாலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. அப்போது நடிகை ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர், போதை பொருள் வாங்கியது, பயன்படுத்தியது, எடுத்து சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தினார்கள் என ரியா தெரிவித்து உள்ளார். 

மேலும், "சுஷாந்த் சிங் கஞ்சா பயன்படுத்துவது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அவர்களே சுஷாந்திற்கு கஞ்சா வாங்கி கொடுத்து உள்ளனர்" என அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார். 

இதேபோல், தன்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த் சிங் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் ரியா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்