சியான் 60: முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

சியான் 60: முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் சியான் 60 படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 

இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டு உருவாகவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தநிலையில் ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்க சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இதுவரை ‘சியான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் மீதம் உள்ள காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்