மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி: லீக்கான புதிய தகவல்

மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி: லீக்கான புதிய தகவல்
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்  வெளிவந்து வெற்றி பெற்ற படம், ‘பிசாசு.’ 

அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா, ‘சைகோ’ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார்.

மேலும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியதுடன், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறி இருந்தார். 

இந்நிலையில், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்