ரசிகரின் வேண்டுகோளை ஏற்று ஹாய் சொல்லி நல்வழிப்படுத்திய யுவன் சங்கர் ராஜா!

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று ஹாய் சொல்லி நல்வழிப்படுத்திய யுவன் சங்கர் ராஜா!
ரசிகரின் வேண்டுகோளை ஏற்று ஹாய் சொல்லி  நல்வழிப்படுத்திய யுவன் சங்கர் ராஜா!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தனது ஒரே ஒரு பதிலால் ரசிகர் ஒருவரை நல்வழிப்படுத்தி இருக்கிறார்.

மே 31 சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம். இது உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். அதன் படி, "நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். ஆனால் ஒருவர் மட்டும், "நீங்கள் எனக்கு ஹாய் என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன்" என்று கூறினார். 
அதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா ஹாய் என்று பதில் அளித்தார். இந்த பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com