நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித். இவருக்கு என ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இதற்கான அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் அழைத்து, அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு விரைந்த நீலாங்கரை காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனையிடப்பட்டது. முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது.
கடந்த ஆண்டும் இதேபோல் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது