தீபாவளிக்கு அண்ணாத்த கன்பார்ம்: அண்மையில் வெளியான தகவல்..!

தீபாவளிக்கு அண்ணாத்த கன்பார்ம்: அண்மையில் வெளியான தகவல்..!
நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை திரும்பி உள்ளார்.

 இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 

இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். விரைவில் அவர் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டப்பிங் பேசி முடித்த பின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்