காதலில் விழுந்த பிரபல சீரியல் நடிகை..!

காதலில் விழுந்த பிரபல சீரியல் நடிகை..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இதில் அமைக்கப்பட்டிருக்கும் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்காகவே  மக்கள் இதை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். 

இந்த சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ஷபானா. இந்த செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி,அவர் மனதில் இருந்து நீங்கா இடத்தையும் பிடித்துள்ளார் ஷபானா.

இந்நிலையில் நடிகை ஷபானா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வந்தது. ரசிகர் ஒருவர் ஆர்யனிடம் திருமணம் குறித்து பேசும் போது ஆர்யன், ஷாபனாவை குறிப்பிட்டு ' நான் இவங்களுக்கு என்ன சொல்லவது ' என கூறியுள்ளார்.

இதற்கு நடிகை ஷபானா 'என்னுடையது' என ஆர்யன் கூறியதற்கு ரீப்ளே செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷபானா இவரை காதலித்து வருகிறார் என உறுதி செய்து சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்