’நீங்க ஹீரோ தான்’… பிரபல நடிகையை பாராட்டிய சோனு சூட்..!

’நீங்க ஹீரோ தான்’… பிரபல நடிகையை பாராட்டிய சோனு சூட்..!

நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறுவனத்துக்கு தனுஷின் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வரும் நடிகை சாரா அலி கான் நிதியுதவி வழங்கி உள்ளார். 

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை மோசமாக தாக்கி வரும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலரும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக பணிகளை ஆரம்பித்த நடிகர் சோனு சூட், தொடர்ந்து கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் சேவையை செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறுவனத்துக்கு தனுஷின் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வரும் நடிகை சாரா அலி கான் நிதியுதவி வழங்கி உள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் நிதியுதவி அளித்தததை குறிப்பிட்டு நடிகர் சோனு சூட் தனது ட்விட்டரில் சாராவை பாராட்டி உள்ளார்.

அதில், “உங்களுடைய நன்கொடைக்கு ரொம்ப நன்றி சாரா அலி கான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உங்களது நல்ல எண்ணம் ஏகப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும். உங்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்க ஒரு ஹீரோ” என சோனு சூட் சாராவை வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்