கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்..!

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தொழிலதிபர் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், காஜல் அகர்வாலும் அவரது கணவர் கெளதம் கிச்லுவும் மும்பையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வாய்ப்பு இருக்கும்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்