கொரோனாவுடன் இந்த பிரச்சனை: உயிர் பிழைத்த நடிகர் அருண் பாண்டியன்!

கொரோனாவுடன் இந்த பிரச்சனை: உயிர் பிழைத்த நடிகர் அருண் பாண்டியன்!

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதய கோளாறில் இருந்தும் அவர் மீண்டுள்ளதாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

90- களில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வந்தவர் பாண்டியன். இவர் நடிப்புடன் படங்களையும் பல படங்களை தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் கூட அப்பா- மகள் இருவரையும் மையமாக வைத்து உருவான அன்பிற்கினியால் படத்தில் தனது மகள் கீர்த்தி பாண்டியனுடன் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அருண் பாண்டியன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அப்போது இவரது இதய குழாயில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளதாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் ஆகிய இருவரும் தங்கள் இணையப்பக்கத்தில் “எங்கள் தந்தைக்கு கொரோனா தொற்று மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,  சரியான நேரத்தில் அந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது தங்களது தந்தை நலமுடன் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளனர். 

இதை தொடர்ந்து அருண் பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்