இந்த 2 திட்டங்கள் அருமை: முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த ஷங்கர்..!

இந்த 2 திட்டங்கள் அருமை: முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த ஷங்கர்..!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று  பதவியேற்ற பிறகு அவர் தலைமையிலான அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. 

முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர், “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையிலும், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையிலும் கையெழுத்திட்டதற்காக பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்